Wednesday, May 22, 2013

ஸ்ரீ பஞ்சனதீஸ்வரர் ஆலயம்


ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத 

ஸ்ரீ  பஞ்சனதீஸ்வரர்






                                       இறைவன் : பஞ்சனதீஸ்வரர்
                  இறைவி   : திரிபுர சுந்தரி 
                                          தலவிருச்சம் :  வன்னி
                                         தீர்த்தம்      :           

புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில்
கண்டமங்கலம் அடுத்துள்ள சிற்றூர்-
திருவண்டார் கோவில் என்றழைக்கப்படும் வடுகூர்.


                                            தல வரலாறு:   
                         
           
படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா,
சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக
இருந்தார். இதனால், அவருக்கு மனதில் அகம்பாவம்
உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார்
சிவன்.
ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி,
அவரை சிவன் என நினைத்து கணவனுக்கு செய்யும் 
மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல்
இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த
சிவன், பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து
விட்டார். ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா, சிவனை
வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார்.
இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக
கருதப்படுகிறது.

பிரம்மாவின் தலையை எடுத்த
சிவன் இங்கு, "வடுகீஸ்வரராக' அருளுகிறார்.
வடுகீஸ்வரர் சுயம்புலிங்கமாக இடது பக்கம்
சற்றே சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார்.
லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. இவரை
மரியாதை செய்யும்பொருட்டு தலையில்
தலைப்பாகை அணிவித்துள்ளனர்.

அம்பாள் திரிபுரசுந்தரி லட்சுமி அம்சத்துடன்
தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
இவளுக்கு "வடுகர் நாயகி' என்றும் பெயர் உண்டு.

திருஞானசம்பந்தர் இவரை:- .

தளரும் கொடியன்னாள் தன்னோடு
உடனாகிக் கிளரும் அரவு ஆர்த்துக் கிளரும்
முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண்டு
இசைபாட ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

என்று பதிகம் பாடியிருக்கிறார்.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில்
இது 16வது தலம்.


சுவாமிகளுக்கு முன்பு அர்த்த மண்டபத்தில்
எட்டு தூண்கள்  இருக்கிறது. அதன் அருகே நின்று
தரிசனம் செய்தால் ராஜபலன்கள் கிடைக்கும்
என்பது நம்பிக்கை.

1 comments:

Unknown said...

சற்று கவனம் தேவை
திருவடுகூர் என்பது திருவாண்டார் கோவில் இல்லை திருவடுகூர் என்பது நெல்லிக்குப்பம் அடுத்த ஊர் திருக்கண்டீஸ்வரம் இந்த ஆலயத்தின் பழமையான பெயர் என்று சொன்னால் வடுகூர் மற்றும் திருவடுகூர் என்று கூறப்பட்டுள்ளது இதன் ஆதாரமாக நடனபாதேஸ்வரர் கோவில் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது

 
© free template