Tuesday, May 21, 2013

ஸ்ரீ மணக்குளத்து விநாயகர் ஸ்தல வரலாறு பகுதி-3

மணற் குளத்து விநாயகர்



ஒரு முறை உயர் அதிகாரியின் சொல்படி
மணக்குள விநாயகர் விக்கிரகத்தை களவாடி
நெடுந்தூரம் கடலில் சென்று போட்டு விட்டு
வந்து விட்டார்களாம். மறுநாள் காலையில்
காண்கையில் அவ்விக்கிரகம் கோயிலினுள்ளேயே
இருந்ததாம். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து
குழம்பிப் போய் மறுபடி இன்னும் கொஞ்சம் அதிக
தூரம் கடலிற் சென்று போட்டு விட்டு வந்தனராம்.
அடுத்த நாள் மறுபடி விநாயகர் அவர் இடத்திற்கே
வந்து அமர்ந்து விட்டாராம். மேலும், மேலும் குழம்பிப்
போன அவர்கள் இந்த முறை விக்கிரகத்தின் மேல்
ஏதாகிலும் அடையாளம் வைத்து போட்டு விட்டு
பார்ப்போம் என்று முடிவு செய்து –விநாயகர்
விக்கிரகத்தின் தலையின் மேல் உளியால் அடித்து
சிறிது உடைத்து செதுக்கி அடையாளம் வைத்து-
போட்டு விட்டு வந்தனராம்.
மறு நாள் காலையில் பழையபடி விநாயகர் அவர்
இடத்தில் அமந்திருக்க –திகைத்து போன வெள்ளையர்கள்
விக்கிரகத்தின் தலையின் மேற்வைத்த அடையாளத்தை
கண்டு-அது தாம் போட்டு விட்டு வந்த விக்கிரகம்
தான் என புரிந்து கொண்டு-விநாயகரின் சக்தியைக்
கண்டு மனந் தெளிந்தனர் என்பர்.

புதுவையில் தோன்றிய தமிழ் புலவர்கள் அனைவரும்
இவ்விநாயகப் பெருமானைப் பற்றி பாடல்கள்
இயற்றியுள்ளனர். மேலும், சித்தர் சித்தானந்த சுவாமிகள்
சித்தர் குரு அக்கா சுவாமிகள், சித்தர் யாழ்ப்பானம்
கதிர்வேல் சுவாமிகள், மகான் அரவிந்தர்,
வ.வெ.சு அய்யர்,மகாகவி பாரதியார் போன்றோரும்
மணக்குள விநாயகரைப் பற்றி போற்றி பாடியுள்ளனர்.

திருவாவடுதுறை,தருமபுர மடாதிபதிகள்-சிருங்கேரி
சங்கராச்சாரியார் சுவாமிகள் முதலிய பெரியோர்களும்
மணக்குள விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று
சென்றுள்ளனர்.

புதுவையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் வாழும்
பக்தர்கள்-தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளுக்கும், புது
வியாபாரம் தொடங்குவதற்கும், புது வாகனங்கள்
வாங்கும் போதும் முதலில் விநாயகரை வணங்கி
வழிபட்டு-அவர் ஆசி கிடைக்கப் பெற்று தொடருவார்கள்.
சில குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை முதன்
முதலில் மணக்குள விநாயகர் சந்நிதிக்கு கொண்டு வந்து
வழிபட்ட பின்னரே –மற்ற கோயில்களுக்குச் சென்று
வழிபடும் வழக்கமும், கட்டுபாடும் இருந்ததாக கூறுவர்.

இத்தனை மகத்துவத்திற்கும் காரணம் விநாயகரின்
சந்நிதியில் சமாதி கொண்டிருக்கும் ஸ்ரீ தொள்ளைக்காது
சுவாமிகளின் திருவருளேயாகும் என்பது யாவரும்
உணர்ந்து அனுபவித்த உண்மையாகும்.

அச்சித்தரின் திருவடிகளை மனமார வாழ்த்தி
வணங்கினால்-ஸ்ரீ மணக்குள விநாயகப் பெருமானையே
வணங்குவதாகும்.
விநாயகரை வணங்கி மகானின் திருவருளுடன்
உடல்நலமும், மனநலமும் பெற்று பல்லாண்டு
வாழ்ந்து நலம் பெற-
வாருங்கள்…….
புதுவை அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு.


மேலும் கோவிலைப் பற்றிய தகவல்களுக்கு
கீழ்கண்ட லிங்கை சொடுக்கவும்;-


0 comments:

 
© free template