அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர்
முன்னால் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயம்
மகாகவி பாரதி சொல்கிறான், ‘நீ வாழும் பகுதியின்
வரலாற்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டுமென்று’.
அவனுடைய சுதேசிக் கல்வி எனும் கட்டுரையில்
நமது பண்டைய வரலாற்றை மக்கள் நினைவில்
வைத்திருத்தல் அவசியம் என்கிறான். ஆகவே
வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு
நினைவுப்படுத்தியாக வேண்டும். அந்நியர்களின்
மீதுள்ள மோகம், அவர்களிடம் நமக்கிருந்த அடிமை
புத்தி, நமக்கு எந்த அளவுக்கு சேதங்களை உண்டு
பண்ணியது என்பதை நினைவுப்படுத்திப் பார்க்கலாம்.
புதுச்சேரியை மகாகவி பாரதியார் ”வேதபுரம்” என்றே
குறிப்பிடுகிறார். அவ்வூருக்கு இந்தப் பெயர்
வரக்
காரணமாக இருந்தது அங்கிருந்த வேதபுரீஸ்வரர்
ஆலயம்தான்.
இது 1746-இல் ஃப்ரெஞ்சு கவர்னர் டூய்ப்ளே என்பவரின்
மனைவியின் தூண்டுதலால் இடித்துத் தள்ளப்பட்டது.
இந்த விவரங்களை அப்போது ஃப்ரெஞ்சு கவர்னரிடம்
துபாஷியாக வேலை பார்த்த ஆனந்தரங்கம் பிள்ளை
என்பவர் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
அப்போது புதுச்சேரியில் மிகவும் பிரபலமாக
இருந்த
வேதபுரீஸ்வரர் ஆலயம் கவர்னர் டூய்ப்ளேவின்
மனைவிக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது.
வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடித்துவிடும் எண்ணம்
ஃப்ரெஞ்சு அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்து
வந்திருக்கிறது. அதிலும் கவர்னர் டூய்ப்ளேயும்
அவர்
மனைவியும் இதில் மிகவும் அக்கறை கொண்டு
நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். அவர்களுடைய
இந்த முயற்சிக்கு கிறிஸ்தவ பாதிரியார்கள்
சிலரும்,
உள்ளூர்க்காரர்கள் சிலரும் ஒத்துழைப்பு நல்கி
வந்தனர்.
அதற்கு முன்பு ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கோயிலை
இடிக்கும் எண்ணம் இருந்த போதும்,
அப்போதெல்லாம்
இங்கிருந்த பிரெஞ்சு அரசுப் பிரதிநிதிகள்
அந்தக்
காரியத்தைச் செய்யத் துணியவில்லை. அப்படி
ஏதாவது
செய்துவிட்டால், ‘இது தமிழ் ராஜ்யம், இந்தக்
கோயிலுக்கு ஏதேனும் ஈனம் வந்தால் நமக்கு
அபகீர்த்தி
உண்டாகும், தங்கள் வர்த்தகம் பாழாகிவிடும்’
என்றெல்லாம் எண்ணி அப்படி எதையும் செய்யாமல்
இருந்தனர்.
தமிழ் மக்களிடையே ஒற்றுமை இல்லாததினால்-
கவர்னர் டூய்ப்ளேவின் ஆட்சியில் எல்லா
அநீதிகளுக்கும் துணிந்தார்கள்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற “வானம் வசப்படும்”
என்ற நாவலை எழுதிய திரு பிரபஞ்சன் அவர்கள்
18-ம் நூற்றாண்டுகளில் புதுச்சேரியின் வரலாறு
பற்றியும் அப்பொழுதிருந்த வேதபுரீஸ்வரர் கோவில்
இடிக்கப்பட்டது பற்றியும் எழுதியுள்ளார்.
பாண்டிச்சேரி ஆலயம் இடிபடும் முன்னரே
காரைக்காலில் இருந்த கயிலாய நாதர் சிவாலயத்தை
இடித்து தள்ளினார்கள். ஹிந்துக்களின் கோயில்களின்
மேல் கைவைக்கக் கூடாது என்ற தஞ்சை மராட்டிய
மன்னர் பிரதாப சிம்மருடன் செய்துகொண்ட
உடன்படிக்கையையும் மீறினார்கள்.
பிரெஞ்சுகாரர்கள் படைஎடுத்து வரும்போது பாதிரிகளும்
கூடவே வருவார்கள். பிரெஞ்சுப் படை இருக்கும்
தைரியத்தில் பசுக்கொலை, ஹிந்து கோயில்களை
இடித்தல், விக்ரஹங்கள், நகைகள் கொள்ளை,
ஹிந்துக்களை மதம் மாற்றுதல் என்ற புனித
கைங்கர்யங்களைச் செய்வார்கள் பாதிரிகள்.
1748-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 9-ஆம்
தேதியன்று தனது நாட்குறிப்பில் ஆனந்தரங்கம்
பிள்ளை எழுதும் செய்தி– ‘இன்றைய நாள் காலையில்
நிகழ்ந்த விபரீதம் என்னவென்றால்’ என்ற
முன்னறிப்போடு எழுதுகிறார். பிரெஞ்சு அதிகாரிகள்
கெர்போ, பரதி முதலியோர் ஏராளமான இராணுவ
வீரர்களைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு கொல்லத்துக்காரர்கள்,
கூலிக்காரர்கள் என்று சுமார்
இருநூறு ஆட்கள் துணைகொண்டு வேதபுரீஸ்வரர்
ஆலயத்தை இடிக்கத்தொடங்கினார்கள். முதலில்
கோயிலின் தென்புற மதிலையும், மடப்பள்ளியையும்
இடித்தனர். இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீ
போலப் பரவியது. உடனே உள்ளூர் வெள்ளாளர்,
கைக்கோள அகமுடைய முதலிகள், செட்டிமார்கள்,
பிள்ளைகள், குடியானவர்கள், ஆலய சாத்தாணிகள்
ஆகியோர் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்று
நடைபெறும் அக்கிரமம் பற்றி முறையிட்டனர்.
பலர் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுத்
தாங்கள் ஊரைவிட்டுப் போய்விடப் போவதாகவும்,
சிலர் தற்கொலை செய்துகொண்டு மாண்டு
விடுவதாகவும் முறையிட்டனர். ஆளுநரிடம் போய்
முறையிடப் போவதாகவும் சொன்னார்கள்.
மக்களுடைய முறையீட்டுக்குப் பதிலளித்து
ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள், “உங்களிடம் இப்போது
இருக்கும் ஒற்றுமை முன்னமேயே இருந்திருந்தால்,
இந்த நிகழ்ச்சி நடந்திருக்காதே!” என்று சொல்லிவிட்டு,
“உங்களில் ஒரு சிலர் பெரிய துபாசித்தனம்
பெறுவதற்காகவும், சாவடி துபாசித்தனம்
பெறுவதற்காகவும் கோயிலை இடிக்க ரகசியமாக
ஒப்புக் கொள்ளவில்லையா? அதனால்தானே
இன்றைக்கு இந்த விபரீதம் நடந்திருக்கிறது”
என்று சொல்லி அவர்களைக் கடிந்து
கொண்டிருக்கிறார்.
கவர்னரும், கவுன்சிலும் இந்த முடிவை
எடுத்திருப்பதால் இதில் நாம் இப்போது ஒன்றும்
செய்வதற்கில்லை. ஆகையால் இயன்றவரை
வாகனங்கள், சிலைகள் முதலியவற்றை பத்திரமாக
எடுத்துச் சென்று காளத்தீஸ்வரர் கோயிலில்
கொண்டு போய் வைத்துவிடுங்கள் என்று
சொன்னதால் மக்கள் சில சிலைகளை மட்டும்
கொண்டு போய் பாதுகாப்பாக பெருமாள் கோவிலில் வைத்துள்ளனர்.அப்படி காப்பாற்றிய விக்கிரகங்களில்
ஒன்று தான் இப்போதுள்ள சோமாஸ்கந்தர்.
கேர்து என்ற பாதிரி மகாலிங்கத்தை காலால்
உதைத்தது மட்டுமில்லாமல் கடப்பாரையினாலும்
உடைத்து சேதப்படுத்தி விட்டான். மற்ற
விக்கிரகங்களையும் உடைத்து விட்டான்.
பெரும்பாலான சிலைகளை பிரஞ்சு சிப்பாய்கள்
சேதப்படுத்தி விட்டனர். நகைகளையும்
கொள்ளையடித்துச்
சென்று விட்டனர்.
இப்பொழுதுள்ள சம்பா கோவில் அருகில்தான்
பழைய வேதபுரீஸ்வரர் ஆலயம் இருந்ததாக
ஆனந்த ரங்கப்பிள்ளையவர்கள் எழுதி வைத்துள்ள
நாட்குறிப்புகளே இதற்குச் சான்றாகும்.
இந்த பதிவின் முழு செய்திகளையும்-மேலும் விபரமாக
தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக்
செய்யவும்.
www.thinnai.com

0 comments:
Post a Comment